உறவுகளின் – அழைப்பும், அணைப்பும்
உறவுகளின் உணர்வுகளை உணர்வதும், புரிதலும் இன்று வரை எவராலும் எளிதாக செய்ய கூடிய செயலாக இருந்ததில்லை. சிலந்தியின் வலையில் சிக்கி தவிக்கும் சின்னஞ்சிறு பூச்சிகளை போல நாம் உணர்ச்சிகளின் வலையில் ஒவ்வொரு நாளும் தவித்துக் கொண்டிருக்கிறோம். இன்று வளர்ச்சிப் பெற்ற தொலைத்தொடர்ப்பு தொழில்நுட்பத்தால் ஒரு வகையில் நாம் அனைவரும் இணைந்தாலும், சில வருடங்கள் முன்பு நாம் உணர்ந்த தனிமையை அவ்வப்போது உணர்ந்துக் கொண்டேதான் இருக்கிறோம். காதலுக்கும் நட்புக்கும் நம் அனைவர் மனதிலும் தனி இடம் கொடுத்திருக்கிறோம். சில வருடங்கள் முன்னர் பெரும் பாலானோர் மனதில் ஒரு கருத்து நிலவி இருந்தது. பல வருடங்களாக தொடர்ப்புகளும் உரையாடல்களும் மறைந்திருந்தாலும் நட்பும் காதலும் அதே போல் நிலைத்து நிற்கும் என்று. இது அன்று இருந்த சூழ்நிலையில் முற்றிலும் உண்மை. அன்று இருந்த நாம் அன்புடையவர்களிடம் பகிர்ந்துக் கொள்ள முடியாமல் தவித்தாலும் அந்த தவிப்பு மறுபுறமும் இருக்கும் என்ற நம்பிக்கையில் மன நிறைவு பெற்று முன்னேரிக் கொண்டிருந்தோம். பிரிவுகளின் சலனங்களில் சிக்கினாலும் மறுபுற நபருக்கு நம் எண்ணங்களால் உறுவாக்கிய முகமூடியை பொரு...