Posts

Showing posts from October, 2018

அழகுகளின் வாடிக்கை!

Image
“ஸ்டாப் ரேக்வேச்டட்”  சக்கரங்கள் நிதானத்தை நாடியது, என் கால்கள் வேகத்தை நாடியது. விடு விடு வென்று பேருந்தை விட்டு இறங்கி, என் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு பார்க் சென்று சற்று இளைப்பாற நடந்தேன். இதுவரை நான் அந்த பார்க் க்கு சென்றதில்லை. அறியாத இடம் என்பதால் சற்று நிதானமாக கவனித்துக் கொண்டு நடந்தேன். சிறிதளவு சிரமப்பட்டு என் கண்கள் தூரத்தில் தெரிந்த இருவரை உன்னிப்பாக ரசிக்க ஆரம்பித்தது. கண்களின் சிரமத்தை ஏற்க மனமில்லாமல் என் கால்கள் அந்த இருவரை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. முத்தின் வெண்மையை திருடிய தங்க தேகம் அவள்! வெள்ளி சங்கிலியாய் மின்னும் தழும்புகளின் தேகம் அவன்! செழுமை மிக்க கலாச்சாரத்தின் புனிதச் சின்னம் அவள்! செந்நீர் சிந்திய உயிர்களினிடையே ஓங்கிய கோடி அவன்! ஆனந்த அருவி சுரக்கும் மடி அவள்! அமைதி காற்றை பரப்பும் மனது அவன்! அதிகாரங்களால் மேகங்களை கிழிக்கும் சதுரங்க ராணி அவள்! நெறிமுறைகளால் விண்ணை வெல்லும் சதுரங்க ராஜா அவன்! நிலையில்லா அழகும் நிலைப்பெற்றுத் திளைக்கும் அவளிடத்தில்! அழகினால் நிலைகுலைந்தாலும் கம்பீர ஆண்மை அவனிடத்தில்! இ...