Posts

Showing posts from April, 2017

டாலர் தத்துவங்கள்!

Image
“என்ன அக்ஷு? ஒரே செமையா என்ஜாய் பண்ற போல? US லைப் வேற, ம்ம் கலக்கல் தான் போ!!”       என்னுடன் பேசும் அனைவரும் இந்த சொற்றொடரை, பெரும்பாலும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். இது என் விஷயத்தில் மட்டுமல்ல. பொதுவாகவே   அமேரிக்கா வில் இருந்தால் எந்நேரமும் சந்தோஷம், கொண்டாட்டம், பேரின்பம் என்ற நினைப்பு அனைவர் மனத்திலும் நிலவி வருகிறது.      ஆம்! பேரின்பம் தான். முதல் அழுகையின் ஒலியை பிறப்பிடத்தில் பெருக்கிய காற்றை இழந்த இன்பம். குறையை சுட்டிக் காட்டி நற்பண்புகளை ஊக்குவித்த பெற்றோரின் வார்த்தைகளை தனியே விட்டு வந்த இன்பம். திடமாக போராட கற்பித்த உடன்பிறப்புகளிடம் முறையற்று உண்டான வாக்குவாதங்களை உதறி விட்டு வந்த இன்பம். நிலா சோற்றில் பாசத்தை ஊட்டினாலும் பாட்டி விதித்த கட்டுபாடுகளை மீறி வந்த இன்பம். ஆருயிர் நண்பர்களின் பந்தத்தை வலுப்படுத்திய கருத்து வேறுபாடுகளை அனாதையாக விட்டு வந்த இன்பம்.     அயல் நாடு வருபவர்களில் தொண்ணுறு சதவிதம் இதை உணர்ந்திருப்பார்கள். இன்பமென்று கூறும் வலி என்று. தாய் நாட்டில் சந்தித்த மகிழ்ச்சிகள் இங்கு...