ஆண்டு புதிது
மாற்றங்கள் என்றும் மாறாதது. புத்தாண்டு, என்றும் புது புது மாற்றங்களைத் தருவது. இதைக் கொண்டாடும் முறையும் மாறிக்கொண்டே வருகிறது. சிறிது நாம் பின்னோக்கி பிராயணம் செய்வோம். என் புத்தாண்டு கொண்டாட்டங்கள் எவ்வாறு மாறுபட்டுள்ளது என்பதைக் கூறுகிறேன். அனைவர் வாழ்க்கையிலும் இவ்வாறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். பதினைந்து ஆண்டுகள் முன்னர் 2000 ஆம் புத்தாண்டு தின முன்னாள் இரவு, அதாவது 31/12/1999 அன்று, எனக்கு ஆறு வயது இருக்கும். அப்போது நான் மட்டுமே என் வீட்டில் குழந்தை. அக்கம் பக்கத்திலும் என் வயதுக்கு சமமான பிள்ளைகள் எவரும் இல்லை. ஆனால் அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள பருவ மங்கைகள் அனைவரும் எங்கள் வீட்டில் கூடி என் அன்னையுடன் அரட்டை அடித்து கொண்டு இருப்பார்கள். ‘இன்னிக்கு எல்லாரும் 12 மணி வர முழிச்சிட்டு இருக்கணும் ‘ என்ற வரி அனைவரின் நாவிலும் வந்து செல்லும். ஒரு விதமானப் பூரிப்பு மனதுக்குள் தங்கி இருக்கும். என்னைத் தூங்கச் சொல்லி அனைவரும் அறிவுறுத்துவர். அதற்க்குக் காரணம், அக்கறையா? அல்லது அவர்கள் உரையாடலை நான் அறிய வேண்டாம் என்பதற்கா? என்பதை இந்நாள் வரை நான் அறிந்த...