அந்த மூன்று நாட்கள்!
கலை நிகழ்ச்சிகள் ! இந்த சொல்லைக் கேட்கும் பெரும்பாலோனோர் தங்கள் கல்லூரிக் காலத்துக்குச் சென்று வருவர். கலை நிகழ்ச்சிகளைப் பொருத்தமட்டில் கால முன்னேற்றத்திற்கு ஏற்ப மாறி வருவதே வழக்கம். என் கல்லூரியில் ஆண்டு தோறும் நடக்கும் INSTINCTS கலை விழா இரண்டு நாள் முன்னரே முடிந்தது. இது முழுதும் மாணவர்களால் நடத்தப்படும் ஒரு பிரம்மாண்டமான விழா. மூன்று நாள் நடைபெறும் விழா ஒவ்வொரு SSN மாணவனுக்கும் இணையில்லாத ஆனந்தத்தை அளிக்கும் விழா.ஒருங்கிணைத்த மாணவர்களும், அதை கண்டு களித்த மாணவர்களும் இன்பத்தின் எல்லையை அடைவர்.என் கல்லூரி வாழ்கையின் கடைசி நிகழ்ச்சி இது. நான் முதலாம் ஆண்டில் படிக்கும் பொது நிகழ்ந்த நிகழ்ச்சியில் ஒரு சாதாரண ஆர்வ ஊழியராக ( volunteer) பணியாற்றினேன். இன்று நான்காம் ஆண்டில் ஒரு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினேன். அன்றும் இன்றும் நான் அறிந்த ஒரு விஷயம் இது. ஆடலோ, பாடலோ, அது மகிழ்விப்பதாக இருந்தாலும், மொக்கையாக இருந்தாலும், நாம் அதை எடுத்துக்கொள்ளும் விதமே நமக்கு இன்பம் பயக்கும். நாம் அனைத்தையும் மாற்றி சுவாரசியத்தை கொண்டு வரும் ரகசியத்தை ...