Posts

Showing posts from September, 2015

பயணங்கள் - சிற்ப உலகம்

Image
சென்னைக்கு   மிக  அருகில் என்று ஏலம் போட்டு நம்மை ஈர்க்கும் வையக வணிகத்தில் ,  சென்னைக்கு அருகில் இருந்தும் 21 ஆண்டுகளாக நான் போகாத  இடம் மாமல்லபுரம். அருகில் இருந்தால் அருமை தெரியாது என்பார்கள். அது உண்மைதான். நண்பர்களின் குடும்பத்துடன் ஒரு நான்கு சக்கர வாகனத்தில் தொடங்கிய பயணம். பழக்கப்பட்ட வழிதான்.எனக்கு.. ஏனெனில் மூன்றைரை வருடமாக என்னை செதுக்கி கொண்டிருக்கும் என் கல்லூரியின் வழி.        பல்லவர்கள்!! இந்த வார்த்தைக் கூறியவுடன் உங்களுக்கு என்ன   நினைவில்   வரும் ?  வரலாற்றுப் பாடத்தில் எப்போதோ கேட்ட வார்த்தை என்ற நினைப்பு வரும். வெறும் வார்த்தைகளில் இவர்களை  மதிப்பிட முடியாது என்று   செயலில்  காண்பித்த   கலை விஞ்ஞானிகள்...  கல்கியின் புத்தகங்களும் ஒரு வகையில் என் தமிழ் ஆர்வத்திற்கு காரணம். சிவகாமி சபதம் படித்த அனைவருக்கும் மகாபலிபுர வரலாறு நிச்சயமாகத்   தெரிந்திருக்கும். மகேந்திரப் பல்லவர் கண்டக் கனவு இந்தச் சிற்பங்க ள்  நிறுவப்பட்ட நகரம். அவருடையக் காலத்தில் அத...