அனுபவம் புதுமை
" மச்சா , Place ஆயிட்டேன்டா !!" இந்த வாசகத்தைக் கூற வேண்டும் என்று பொறியியல் படிக்கும் பெரும்பாலானோர் ஆசை . நாம் நான்காம் ஆண்டு வரும் முன்னரே நம் சீனியர்களைப் பார்த்துப் பழகி இருப்போம் . ஆனால் நான்காம் ஆண்டு வந்த பிறகு வாழ்க்கையிலும் , மனத்திலும் நிறைய மாற்றம் சிலரிடம் காணலாம் . ஏன் இந்த மாற்றங்கள் ? என் பார்வையில் சில கருத்துக்கள் இங்கே குறிப்பிட்டுள்ளேன். பொதுவாக மாணவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம் 1) படித்தது போதும் , சம்பாரித்து வாழ்க்கையைத் துவங்கலாம் . 2) படிக்க வேண்டும் எனினும் வேலை ஒன்று இருப்பது பாதுகாப்பு. (Hold back) 3) படிக்கதான் போகிறேன் இதில் மூன்றாவது வகை மாணவர்கள் தெளிவானவர்கள் . அவர்களைப் படிக்க விட்டுவிடலாம் . முதல் வகை மாணவர்களை காண்போம் . வேலை கிடைக்கத் தீவிரமாக உழைப்பர் . கிடைத்து விட்டால் சந்தோஷம்தான் . இலையெனில் அவர்கள் முகங்கள் புன்னகையை மறந்து அகோரமாக காட்சியளிக்கும் . ...