முத்தான உறவுக்கு!!
உறவுகள் உருவாவது யாராலும் கணிக்க முடியாது. வாழ்க்கையின் சுவாரசியமே அதில்தான் இருக்கிறது. பல உறவுகளை தோழன், தோழி அண்ணன், அக்கா, காதலன், காதலி, கணவன், மனைவி என்று வரையறுக்க முடியும். சில உறவுகளை வரையறுக்க இயலாது. அது நட்பின் வழியாகவே நாம் பெறுவோம். நட்பு என்று இயல்பாக கூறிவிட முடியாது. அதையும் தாண்டி நம்மிலும், நம் அன்றாட வாழ்க்கையிலும் ஒரு பெரும் பங்கு வகிக்கும் உறவாக இருக்கும். அது அமைவது மிகவும் கடினம். கடினத்திலும் கடினம் அந்த உறவின் ஏற்ற தாழ்வுகளை உணர்ந்து அதை சிதைத்து விடாமல் இருப்பது. இது உறவு கொள்ளும் இருவர் மத்தியிலும் இருத்தல் வேண்டும். ஏன் இந்த வியாக்கியானம் என்று எண்ணுபவர்களுக்கு, அப்படி அமைந்த ஒரு உறவின் கதை கூறுகிறேன்!! இரு அறிதான பெண்மணிகள் அவர்கள், இருவரும் கண்ட முதல் நாள் முதல் பெரிதாக பேசியதில்லை. ஒரே நட்பு வட்டம் இருந்ததால் என்றும் அவர்களுடன் ஒன்றாக இருந்தார்கள். இந்த இருவரையும் நான் அ மற்றும் ம என்று சித்தரிக்கின்றேன். அ அனைவரிடமும் பாசத்தை அள்ளி அளிப்பவள், ம அளவுடன் அனைவரிடமும் பேசுவாள், அ தனக்கென்று பாராமல் அனைவருக்கும் செய்பவள் ம தன்னை முதல் ...