வல்லரசுகள் உண்மையாகவே வல்லரசு தானா?
உலக நாடுகளின் அரசியலையும் , பொருளாதாரத்தையும் பற்றி நான் பொதுவாகக் கட்டுரைகள் எழுதுவதில்லை . விழிப்புணர்வும் , பொது அறிவும் இருப்பினும் , கட்டுரை எழுதும் அளவு விவரங்கள் என்னிடம் இல்லை என்ற காரணத்தினால் , உறவினர்கள் , நண்பர்களோடுப் பேச்சை நிறுத்திக் கொள்வேன் . எனினும் , சில நாட்களாக மிகுந்த ஆர்வத்தோடு உலக செய்திகளைக் கவனித்து வருகின்ற எனக்கு , பல கருத்துகளை பகிர வேண்டும் என்ற ஆவல் வந்தது . இந்த உரையில் , பல அரசியல் வல்லுனர்களுக்கும் , ஆர்வலருக்கும் , முரண் பட்ட கருத்துக்கள் இருக்கலாம் . எனினும் , ஒரு அமெரிக்க வாழ் நடுத்தர வர்க இந்திய பிரஜையாக , நான் கண்டதைப் பகிர விரும்புகிறேன் . கடந்த சில வாரங்களாகக் கொரோனவை தவிர வேறு எந்தச் செய்திகளையும் நான் வாசிப்பதில்லை . நேற்று அமெ ரிக்காவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80,000 தாண்டி , இப்போது 100,000 கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது . குறுந்தகவல்களும் , அழைப்புகளும் அக்கறையின் பேரில் இந்தியாவில் இருந்து ஒலித்துக்கொண்டிருக்க...