Posts

Showing posts from February, 2016

காதல்

Image
காதல் பலபலக்கும்   நீரில்   படபடக்கும்   வாத்து   காதல்   கொண்டது , வெந்நிற   மேகங்களில்   விளையாடும்   பறவையின்   பிம்பம்   கண்டு .. ஆழ்கடலில்   துள்ளி   எழும்   டால்பின்கள்   காதல்   கொண்டது , தடைகளின்றி   தவழ்ந்து   செல்லும்   கப்பலைக்   கண்டு .. சாலையோர   அங்காடியில்   விற்க்கப்பட்ட   ஆடைகள்   காதல்   கொண்டது , சாலையில்   ஓய்யார   நடையிடும்   தரமான   உடைகளைக்   கண்டு .. வார்த்தைகளுக்கும்   நாவுக்குமிடையே   மின்பகு   பொருளாகும்   உமிழ்நீர்   காதல்   கொண்டது , இதயம்   வெடித்து   கண்ணீராக   வந்த   உதிரத்தின்   ருசியை   உணர்ந்து .. உணர்வுகளில்   உழன்று   உருகும்   அவள்   மனம்   காதல்   கொண்டது , வார்த்தைகளுக்கு   அழகு   தரும்   அவன்   குறளைக்   கேட்டு ..