Posts

Showing posts from October, 2017

ஹொபோகென், அக்டோபர் 27 2017

Image
         இலையுதிர் வண்ணத்தை தூவ சோர்வுற்று இளைப்பாறுகையில், வளிய உதவ எண்ணி வாடை காற்று வண்ணங்களை இலைகளுக்கு பரப்பிக் கொண்டிருக்கிறது. ஆர்வக்கோளாறினால் சற்று வானத்துக்கும் தெளித்து விட்டது வாடை காற்று.   கடலை சேரும் ஆரவாரம் அளவில்லாமல் இருப்பினும் இரு புற நகர்களின் அழகை மெருகேற்றும் பொறுப்பு கருதி, பொங்கி வரும் தன் ஒய்யார நடையை, வெட்கத்தோடு கட்டுபடுத்தி, ஜெர்சியை ஒரு புறமும் , நியூயார்கை மறு புறமும் தழுவிக் கொண்டிருக்கும் ஹட்சன் நதி. எதிர் கரையின் வலப்புறம் வானை கிழிக்க நிற்கும் WTC (உலக வர்த்தக மையம்) மற்றும் அதன் உற்றார் உறவினர் போல சின்னஞ்சிறு ( WTC உடன் ஒப்பிடுகையில்) கட்டிடங்கள். கிழித்த வானத்தை தங்குவோம் என, இடப்புறம் நமது Empire State கட்டிடம் அதன் உற்றார் உறவினரோடு காத்துக் கொண்டிருக்கிறது.     அரை மதியின் வெளிச்சமும், ஒரு நொடிக்கு முன் எரிய ஆரம்பித்த விளக்கு கம்ப ஒளியும் போட்டியிட்டு என் நாட்குறிப்பின் எழுத்துக்களில் ஊர்ந்து கொண்டிருக்கிறது.       பத்து நிமிடத்தில் நானும் போட்டிக்கு வருகிறேன் என்பது போல நியூயார்க் ந...