Posts

Showing posts from May, 2018

காதல் கலாபம்

Image
காந்தர தேசத்து இளவரசியுடன்      போட்டியிடும் கண்ணியம்! பாரதியின் புதுமைப் பெண்ணிடம்,        பவனிவரும் பெண்ணியம்! கண்ணகியின் அடக்கம் தழுவி        பொங்கிவரும் நியாயம்! ஒருசேர வந்தவளோடு காதல் கொள்ள, மதம் கொண்ட மதங்களை மதிக்க, காதலை எரித்து உயிரற்ற உடலாக அவன்! நறுமுகை பூக்கையில், மேலெழும் புருவங்கள்! ஆப்பிலின் சாயலில் , சிவக்கின்ற கன்னங்கள்! நீர் வீழ்ச்சிகளுக்கு போட்டியாக, பாய்கின்ற குழல்கள்! நெல்லையின் பிள்ளை நித்தம் இதை பாட, இரு வீட்டார் சம்மதம் மொழிய, நங்கை ஏந்த தவங்கிடக்கும் அவன்! வெட்கம் கண்ணாமூச்சி ஆட, வெடுக்கென்று விதைத்த முத்தங்கள்! வம்பு சண்டைகளில் அழ, திடீரென்று உதயமான அணைப்புகள்! தவம் புரிந்து கிட்டிய , தனிமையில் தீண்டிய உணர்ச்சிகள்! இதில் கொண்டது காமம் என்றெண்ணி முற்றிலும் உருவான கருவாகிய காதலை   , கருச்சிதைவு செய்து விக்கி விக்கி அழுகும் அவள்!   மங்கைகள் மயங்கும், மாய குறுஞ்சிரிப்பு! கரிசக்காடு மறைத்து , பொக்கிஷமான கன்னக்குழ...