விதைகளின் விழுதுகள் - 1
"நறுமுகைகளின் முகிழ்நகைகளை புகைப்படத்தில் நிலைநிறுத்தும் நாம், அதன் முகிழ்நகைகளை நிஜத்தில் நிலைத்திருக்க, நாம் ஆற்ற வேண்டிய செயல்களை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறோம்" நான் பேச வருவது நம் மழலை களஞ்சியங்கள் பற்றி தான். நானும், நீங்களும், அனைவரும் அந்த பருவங்களை கடந்து வந்திருப்போம். நம்மில் பலர் நன் முறையில் வளர்க்கப்பட்டு, இன்று இந்த உரையை படிக்கும் அளவு அறிவுடையவர்களாக இருக்கிறோம். குழந்தை வளர்ப்பு என்பது தனி கலை என்று பலர் கூறுவர் . முற்றிலும் உண்மை. இன்றைய நிலையில் கலை எனக் கருதக் கூட வேண்டாம். தொல்லை எனக் கருதாமல் இருந்தால் போதும். ரேக்ளா பந்தயத்தில் ஓடும் ஆ க்களை போல பெற்றோர்களே ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், குழந்தைகள் எங்கே ஓடுவார்கள்? குழந்தைகளை ஓட விட்டு ஒரு நாள் வேடிக்கை பாருங்களேன்.. மாறி வரும் வாழ்க்கை முறையில் பெற்றோர்கள் இருவருமே வேலையில் உள்ள மன அழுத்தத்தை தாண்டி வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். இது இல்லத்தரசிகளுக்கும் பொருந்தும். அவர்களும் ஒரு வகையில் வீட்டு வேலைகளை செய்கிறார்கள் அல்லவா. மன அழுத்தம் அவர்களுக்கு ...