Posts

Showing posts from April, 2019

தீரா உலா - Ⅲ

Image
கதிரவன் தன் கதிர்களைக் கொண்டு, ஜன்னல் வழியாக, சுமார் இருபத்தைந்து இரட்டை ஜடை மடந்தைகளை ரசித்துக் கொண்டிருந்தான். கதிர்கள் வெப்பத்தைக் கிளப்பி, வியர்வை துளிகளை முத்துக்களாக முகத்தில் உருவாக்கி, பிரகாசித்துக் கொண்டிருந்தன. சில முத்துக்கள் பருக்களின் இடையில் உடைந்தன. சில முத்துக்கள் வழுவழுப்பான கன்னங்களில் ஸ்கேட்டிங் செய்துக் கொண்டிருந்தது. கதிரவன் மடந்தைகளை பிரகாசிக்கச் செய்ய, அவன் மேல் பொறாமை கொண்ட இளம் மாணவர்கள், ஓரக் கண்ணில் கோபமும், நேர் கண்ணில் சோகமும் கலந்து, வகுப்பு நடத்தும் இயற்பியல் ஆசிரியையின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். இரண்டாம் பெஞ்சின் ஓரமாக இருந்த சிறு சாக் பீஸ் துண்டை சாரு எடுத்தாள். அவளின் விரல்களின் வியர்வை மீது அந்த தூள்கள் ஒட்டிக் கொண்டது. சாக்கை கீழே வைத்து விட்டு விரல்களை சேர்த்து துடைத்தாள். அருகில் இருந்த யாழினி அதை பார்த்து புன்முறுவல் உதிர்த்தாள். இருவரும் மொழி இல்லாமல் பேச ஆரம்பித்தனர். புருவத்தை தூக்கி ‘என்ன?’ என்று அவள் கண்களில் வினா எழுப்பினாள். அவள் புருவத்தை குறுக்கி தலையை அசைத்து ‘ஒன்றுமில்லை’ என்று உணர்த்தினாள். ...

தீரா உலா - II

Image
  படிக்கட்டுகளில் பரவிக் கிடக்கும் குளிருடன் கதை பேசிக் கொண்டே, ஸாக்ஸ் அணிந்த அவளின் கால்கள், மெல்ல கீழே இறங்கியது. மரப் படிக்கட்டுகளால் சற்று சத்தமாகவே பேசிக் கொண்டிருந்தது. சன்னலின் ஓரத்தில் எட்டிப் பார்க்கும் பனிக் கட்டிகளை, கண்டும் காணதது போல, அந்த கால்கள் கதவை நோக்கி நடந்தது. விரல் நுனியுடன் போட்டியிட்டு, வளர மறுக்கும் நகங்கள் கொண்ட அவளின் கைகள் கதவை திறந்தது. ‘ஹே! வரேன்னு சொல்லவே இல்ல’ ஆயிரம் மின் மினி பூச்சிகளை உள்ளங்கையில் அடைத்தாலும், வெளிவராத ஒரு பிரகாசம் அவள் முகத்தில் தவழ்ந்தது . அவன் ஏதும் பேசாமல், சிகரட் புகையில் வாடிக் கிடந்த அவன் உதடுகளுக்கு கொஞ்சம் புன் சிரிப்பை பரவ விட்டு உயிர் கொடுத்தான். அவளை கன நொடியில் பின்புறமாக திரும்பச் செய்து, அவன் கைகளை வைத்து, அவள் கண்களை மூடினான். அவள் கண் மை, அவனின் உள்ளங்கை வெப்பத்தில் உருகி, விரல்களில் குறுந்தகவல் எழுத ஆரம்பித்தது. ‘என்ன பண்ற நீ? என்ன இதெல்லாம்?’ அவள் குரல் வளை, உமிழ் நீரை உள் வாங்கி, புன்னகையை அவளின் இதழ்களில் தெளிக்க தொடங்கியது. நீண்ட நெடிய சோபாவில் அவள் அமர வைத்து, கைகளால் சிறைப் பிடித்த அவள் கண்கள...