Posts

Showing posts from August, 2016

சித்தரிப்பின் சித்தாந்தம்

Image
ஆகஸ்ட் 14, 2016      ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒன்றோடொன்று பின்னி பிணைந்து மனிதனின் வாழ்வை ஆட்டிப்படைப்பதே இயற்கையின் அமைப்பாக சித்தரிக்கப் பட்டுள்ளது. சித்தரிப்பின் சித்தரவதையில் சிக்கி தவிப்பதும், அதே சித்தரிப்பின் சிரிப்பில் சிலாகித்து மகிழ்வதும், மனிதனின் இயல்பு. இந்த நாளில் நான் இரு உணர்வுகளையும் ஒன்று போல் உணர்ந்து சிக்கி தவித்தேன் ஆனந்தத்திலும், அழுகையிலும்.     சிறிது நாட்களில் முதுகலை பட்டப்படிப்புக்காக நான் அயல் நாட்டுக்கு செல்ல இருப்பதால் என் பள்ளி பருவ நண்பர்கள் அனைவரும் இன்று சந்திப்பதாக திட்டமிட்டிருந்தோம். காலை 10 மணியளவில் அனைவரும் தொழி இல்லத்தில் ஒவ்வொருவராக ஒன்று சேர தொடங்கினோம். எதிர்பார்ப்பு இல்லாத, குறைகளை சுட்டி காட்டாத நட்பு மதிப்பிட முடியாதது. எழுவரும் ஆறு வருடத்துக்கு மேல் ஆருயிர் தோழிகளாக உள்ளோம். என் பயணம் இனிமையும் வெற்றியும் அடைய வாழ்த்துக்களும், பரிசுகளுடன் இன்றைய தினம் எல்லையற்ற பூரிப்புடன் நகர்ந்துக் கொண்டிருந்த வேளையில், கொடுங்கனவு கூட தராத அதிர்ச்சியை தந்தது அந்த தொலைக்காட்சி பெட்டி. திரு. நா. முத்துக்குமாரின் மறைவு. ...