Posts

Showing posts from March, 2019

நம்ம பார்வைல தான் இருக்கு

நேத்து ரிலீஸ் ஆன, அநீதி கதைகள் படத்துக்கு போனேன். புளோரிடாக்கு குடி ஏறி மூணு மாசம் தான் ஆகி இருக்கு. அதனால தமிழ் பிரண்ட்ஸ் யாரும் இல்ல. தனியா தான் போனேன். இருபது நிமிஷம் முன்னாடியே நான் தியேட்டர்ல போய் உட்காந்துட்டேன். தமிழ் படம், அதனால தியேட்டர்ல சுமார் ஒரு அம்பது பேரு தான் இருந்திருப்பாங்க. கொஞ்சம் காலேஜ் ஸ்டுடென்ட்ஸ், ரெண்டு மூணு ஃபேமிலி, கொஞ்சம் நடு வயசு ஆம்பளைங்க ன்னு எல்லா வயசு மக்களும் வந்திருந்தாங்க. சில பேரு தனியா வந்திருக்காளேன்னு வித்தியாசமா என்ன பார்த்தாங்க , சில பேரு  என்ன அப்படி  பார்த்த மாதிரி இருந்துச்சு. படத்தோட சில நுணுக்கமான இடத்துல எனக்கு கை தட்டணும்  போல இருந்துச்சு. ஆனா தயக்கத்தோட கண்ட்ரோல் பண்ணிட்டு இருந்தேன். நம்ம மக்கள் கொஞ்சம் ஜட்ஜ்மெண்டல் ன்னு ஒரு முத்திரை என் ஆழ் மனசுல பதிஞ்சு இருக்கு. என்ன அறியாமலே என்னால எக்ஸ்பிரஸ் பண்ண முடியாத நிலைல நான் இருந்தேன்.ஒரு இன்வாலேன்ட்ரி ஆக்ஷன் மாதிரி. தனியா வந்திருக்கோம், ஒரு பொண்ணு இந்த மாறி விஷயத்துக்குலாம் கை தட்டலாமா? ன்னு பேசுற மக்கள் நடுல அப்படி தான் நான் இருக்கணும் ன்னு மூளை போர்ஸ் பண்ணிட்டு இருந்துச்ச...

தீரா உலா- Ⅰ

Image
     அவள் ஒரு முப்பத்தி ஏழு வயது, பேரிளம் பாட்டி. இருபது வருடங்களுக்கு முன்னர் இவ்வாறாக இளம் பாட்டிகள் ஜனித்து வந்தனர். சுவரம் லயம் தாளம் ஜதி  இதேதும் அறியாத ஆறுமாத குழந்தை அவளின் தாலாட்டில் மயக்க நிலையில் ததும்பிக் கொண்டிருந்தது. அது தான்  இசை என்று குழந்தையின் ஆழ் மனதில் பதிய ஆரம்பிக்கலானது. கருவறையிலிருந்த இருட்டும், கதகதப்பும் அந்த அறையில் குடிக் கொண்டிருந்தது. அந்த தொட்டிலின் ஆட்டம், அன்னை வயிற்றில் இருந்த  போது, அன்னையின் நடையால் ஏற்பட்ட ஆட்டம் போல இருந்தது அக்குழந்தைக்கு. கருவிலிருந்த போது மேலிருந்து தன் செவியை அடைந்த குரலை ஒத்த , ஒரு குரல் பாடல் பாடிக்கொண்டிருந்ததை அது கேட்டது. சொப்பன லோகத்தில் சஞ்சரிக்கலானது. அந்த நடுவயது பெண்ணின் இதழ்கள்  காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்  கண்மணி உன்னை நான் கருத்தினில் நிறைத்தேன், உனக்கே உயிரானேன் எந்நாளும் என்னை நீ மறவாதே! நீ இல்லாமல் ஏது நிம்மதி. நீதானே என் சந்நிதி!  இந்த வரிகளை மொழிந்துக் கொண்டிருந்தது. கண்ணதாசன் வரிகளில் அவள் கணவனின் தாசி என்பதை வெளிப்படுத்திக் கொண்டிரு...