கிறுக்கல்கள் - 1
நண்பர்கள் பள்ளி முதல் கல்லூரி வரை , பாடம் முதல் தேர்வு வரை , வினா முதல் விடை வரை , கனவு முதல் நிஜம் வரை , இன்பம் முதல் துன்பம் வரை , வெற்றி முதல் தோல்வி வரை , கண்ணீர் முதல் காயம் வரை , அலைபேசி முதல் இணையதளம் வரை , இணைவது முதல் பிரிவது வரை , சண்டை முதல் அரட்டை வரை , நொடிகள் முதல் பல மணி நேரங்கள் வரை , காதல் முதல் கல்யாணம் வரை , தேநீர் முதல் விருந்துகள் வரை , குளிர் பானங்கள் முதல் மது பானங்கள் வரை , கோடை காலங்கள் முதல் குளிர் காலங்கள் வரை , கழிவறை முதல் கல்லைறை வரை , ஆண் முதல் பெண் வரை , எண்ணற்ற முதல் களுக்கு , முடிவுகளற்ற வரை யாக ... ஏதோ ஒரு வகையில் துணையிருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் தலை வணங்குகிறேன் ! திருமணம் வருகைத் தரும் கொலுசுகளின் ஓசை , வரவேற்ப்பு இன்னிசையையும் மிஞ்ச .. நெடு நாளுக்குப்பின் நகையாடும் முகங்கள், மனப்பந்தலின் அழகையும் மிஞ்ச .. உலகமே சஞ்சரிக்கும் ...