காதல்



பலபலக்கும் நீரில் படபடக்கும் வாத்து காதல் கொண்டது,
வெந்நிற மேகங்களில் விளையாடும் பறவையின் பிம்பம் கண்டு..
ஆழ்கடலில் துள்ளி எழும் டால்பின்கள் காதல் கொண்டது,
தடைகளின்றி தவழ்ந்து செல்லும் கப்பலைக் கண்டு..
சாலையோர அங்காடியில் விற்க்கப்பட்ட ஆடைகள் காதல் கொண்டது,
சாலையில் ஓய்யார நடையிடும் தரமான உடைகளைக் கண்டு..
வார்த்தைகளுக்கும் நாவுக்குமிடையே மின்பகு பொருளாகும் உமிழ்நீர் காதல் கொண்டது,
இதயம் வெடித்து கண்ணீராக வந்த உதிரத்தின் ருசியை உணர்ந்து..
உணர்வுகளில் உழன்று உருகும் அவள் மனம் காதல் கொண்டது,
வார்த்தைகளுக்கு அழகு தரும் அவன் குறளைக் கேட்டு..

Comments

Popular posts from this blog

திரு;மதி!

வல்லரசுகள் உண்மையாகவே வல்லரசு தானா?

துயரம்