முத்தான உறவுக்கு!!

உறவுகள் உருவாவது யாராலும் கணிக்க முடியாது. வாழ்க்கையின் சுவாரசியமே அதில்தான் இருக்கிறது. பல உறவுகளை தோழன், தோழி அண்ணன், அக்கா, காதலன், காதலி, கணவன், மனைவி என்று வரையறுக்க முடியும். சில உறவுகளை வரையறுக்க இயலாது. அது நட்பின் வழியாகவே நாம் பெறுவோம். நட்பு என்று இயல்பாக கூறிவிட முடியாது. அதையும் தாண்டி நம்மிலும், நம் அன்றாட வாழ்க்கையிலும் ஒரு பெரும் பங்கு வகிக்கும் உறவாக இருக்கும். அது அமைவது மிகவும் கடினம். கடினத்திலும் கடினம் அந்த உறவின் ஏற்ற தாழ்வுகளை உணர்ந்து அதை சிதைத்து விடாமல் இருப்பது. இது உறவு கொள்ளும் இருவர் மத்தியிலும் இருத்தல் வேண்டும்.

ஏன் இந்த வியாக்கியானம் என்று எண்ணுபவர்களுக்கு, அப்படி அமைந்த ஒரு உறவின் கதை கூறுகிறேன்!!

இரு அறிதான பெண்மணிகள் அவர்கள், இருவரும் கண்ட முதல் நாள் முதல் பெரிதாக பேசியதில்லை. ஒரே நட்பு வட்டம் இருந்ததால் என்றும் அவர்களுடன் ஒன்றாக இருந்தார்கள்.
இந்த இருவரையும் நான் அ மற்றும் ம என்று சித்தரிக்கின்றேன்.

அ அனைவரிடமும் பாசத்தை அள்ளி அளிப்பவள்,
ம அளவுடன் அனைவரிடமும் பேசுவாள்,
அ தனக்கென்று பாராமல் அனைவருக்கும் செய்பவள்
ம தன்னை முதல் நிறுத்துபவள்
அ தன்னிடம் நம்பிக்கை கொண்டவள்
ம தன்னிடம் அவநம்பிக்கை கொண்டவள்

அ வின் சில செயல்கள் ம க்கு தேவை இல்லாதது என்று நினைத்தாள். ஆனால் அ ம விடம் என்றுமே நாட்டம் கொண்டிருந்தாள். அ இயல்பாகவே அனைவரிடமும் இருப்பது போல ம விடமும் இருந்தாள். மனதில் ஆயிரம் இருந்தாலும் ம என்றும் அ வின் நற்பண்புகளை என்றும் பாராட்டி கொண்டிருந்தாள். ஒரு அருமையான நட்பு அவர்களிருவரிடத்தில் ஒரு இரண்டு வருடத்தில் உருவானது. அனால் ஆழ்ந்த உரையாடல்களில் என்றும் அவர்கள் இடுபட்டதில்லை. இருவரிடத்திலும் ஒரு நினைப்பு இருந்து வந்தது. தாங்கள் இருவரும் இயல்பான நட்பை மீறி ஏதும் அவர்களுள் உருவாகாது என்று. இருவரும் ஒருவருக்கொருவர் என்றும் உதவி செய்து கொண்டு இருப்பார்கள். இவ்வாறாக அவர்கள் சந்தித்து மூன்றரை வருடம் ஆனது.

அதன் பிறகு, நட்பு வட்டத்தில் நடந்த சில மாறுதல்கள், மோதல்களும் நிகழ்ந்து விதி இவர்களை இணைத்தது. ஆழமான உரையாடல்கள், தீவிரமான சிந்தனைகள், நீண்ட விவாதங்கள், என்று இருவரும் எப்போதும் பகிர்ந்து கொண்டார்கள். இவர்களால் ஒரு நட்பு வட்டம் உருவாகி, அதில் சிக்கியவர்கள் அனைவரும் அந்த நட்புக்கு அடிமையானார்கள்.
மாற்றம் நிறைந்த வாழ்க்கையில் தூரம் இவர்களை பிரித்தாலும் இணையம், இவர்களை என்றும் இணைத்தே இருந்தது. அ தனிமையில் சிக்கி தவித்து கொண்டிருந்த வேளையில் ம வே அவளின் ஒரே துணையாக இருந்தாள். இருவரும் பேசாத விஷயங்கள் என்று ஏதும் இல்லை. இவ்வாறாக இணைந்திருந்த இவர்களிடத்தில் ஒரு சிறு மனவருத்தம் நிகழ்ந்தது.

அதன் விளைவு, அ, ம அவளின் வாழ்வில் எந்த அளவு முக்கியத்துவம் பெற்றவளாக இருக்கிறாள் என்று உணர்ந்தாள். ம வின் பிரிவால் அவள் வாடினாள். அ விடம் ம பேச வரும் பொது, அ அவளின் இயற்க்கைக்கு மாறாக கோபத்தை அள்ளி வீசினாள். ம வின் பிறந்த நாளுக்கு அ பேசக் கூடாது, ஏதும் செய்வதில்லை என்று முடிவெடுத்தாள். உறவுகளின் மாயை யாரை விட்டது. ம வின் குறுந்தகவலுக்கு பதில் அளிக்காமல் வலைப்பதிவு ஒன்று எழுத்துக் கொண்டிருக்கிறாள் ம வை முன்னிலை படுத்தி.

அ கண்டிப்பாக ம விடம் பேசாமல் இருக்க மாட்டாள். ம வும் அ விடம் விவாதம் செய்து அவள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று வெற்றி பெறுவாள். என்னினும் இவர்களை வென்றது இவர்களின் உறவு.

உறவுகளிடம் உளமார அரவணையுங்கள். உங்களின் பிரிவால் வாடுபவர்கள் இந்த உலகில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று நாம் கண்டு பிடிப்பது தான் மிகவும் கடினம். பிரிவின் வலியை அறிந்தவர்கள் ஒரு நாளும் உங்களை விட்டு பிரியமாட்டார்கள். அ ம வை பிரியாதது போல!!



பிரியமுடன்,

அக்ஷய கிருத்தி.

Comments

Popular posts from this blog

வல்லரசுகள் உண்மையாகவே வல்லரசு தானா?

திரு;மதி!

துயரம்