கிறுக்கல்கள் - 1
நண்பர்கள்
பள்ளி முதல் கல்லூரி வரை,
பாடம் முதல் தேர்வு வரை,
வினா முதல் விடை வரை,
வினா முதல் விடை வரை,
கனவு முதல் நிஜம் வரை,
இன்பம் முதல் துன்பம் வரை,
வெற்றி முதல் தோல்வி வரை,
கண்ணீர் முதல் காயம் வரை,
அலைபேசி முதல் இணையதளம் வரை,
இணைவது முதல் பிரிவது வரை,
சண்டை முதல் அரட்டை வரை,
நொடிகள் முதல் பல மணி நேரங்கள் வரை,
காதல் முதல் கல்யாணம் வரை,
தேநீர் முதல் விருந்துகள் வரை,
குளிர் பானங்கள் முதல் மது பானங்கள் வரை,
கோடை காலங்கள் முதல் குளிர் காலங்கள் வரை,
கழிவறை முதல் கல்லைறை வரை,
ஆண் முதல் பெண் வரை,
எண்ணற்ற முதல் களுக்கு,
முடிவுகளற்ற வரை யாக...
ஏதோ ஒரு வகையில் துணையிருக்கும்
அத்தனை நண்பர்களுக்கும் தலை வணங்குகிறேன்!
திருமணம்
வருகைத் தரும் கொலுசுகளின் ஓசை,
வரவேற்ப்பு இன்னிசையையும் மிஞ்ச..
நெடு நாளுக்குப்பின் நகையாடும் முகங்கள்,
மனப்பந்தலின் அழகையும் மிஞ்ச..
உலகமே சஞ்சரிக்கும் உண்ணத இல்லரத்தில், இன்பத்தையும் துன்பத்தையும் கடக்க….
நம்பிக்கையுடன் மேடையில் இணைய இருக்கும்,
எழில் மிகு மங்கையான..
கரங்களை இணைக்க காத்திருக்கும் தமிழ் மகளையும்,
வீரம் நிறைந்த செல்வனாக..
வீரம் நிறைந்த செல்வனாக..
பற்றிய கரங்களை காப்பாற்றும் தமிழ் மகனையும்,
நூறாண்டு காலம் நலமாக வாழ..
நூறாண்டு காலம் நலமாக வாழ..
நாளொன்று வந்து வாழ்த்த வேண்டி கேட்டுக்கொள்கிறேன்!
முதியோர் இல்லம்
அணாதைகளின் வசிப்பிடம்
வயதான குழந்தைகளின் காப்பகம்
வாடிய நெஞ்சங்களின் உறைவிடம்
கூன் விழுந்த பாட்டியின் மறைவிடம்
சுமந்த கருவறைகள் தூக்கியெரியப்பட்ட இடம்
தேய்ந்து போன கால்கள் தடுமாறுமிடம்
மனத்தால் மக்களை எண்ணி வாடுமிடம்
இதயம்
நொடிக்கு நொடி எனக்காகத்
துடிக்கும் உயிர்தோழனே..
மெலிதான இதயஉறையில்
உள்ளடக்கப்பட்ட சிசுவே..
கருவில் நான்காம்
வாரம் முதல்
உழைக்கத் தொடங்கும்
உழியன் நீ!
நான்கு அறைகளாகப்
பிரிந்து, சுருங்கவும்
விரியவும் ஒப்பந்தம்
போட்ட நீ!
நரம்புகளால் சமர்ப்பணம்
செய்யப்பட்டு உதிரத்தை
செங்குருதியாக மாற்ற
உதவும் நீ!
ரத்தக்குழாய்களால்
உறுப்புகளுக்கு உயிர்கொடுத்து அணுக்களை
உயிர்பித்து உதிக்கச்
செய்யும் நீ!
விலா எலும்புகளால்
சிறைப்பட்டுத் தவிக்கும்
விடுதலை விரும்பா
ஆயுள் கைதியே..
மூளையுடன் பரஸ்பர
உடன்படிக்கையோடு செயல்படும்
கலகமற்றுக் கடமை
செய்யும் மேதாவியே..

Comments
Post a Comment