பிரேக் அப் (BREAK UP)




இந்தத் தலைப்பைக் கண்டு ஆவலாக இதைப் படிக்க வந்திருக்கும் வாசகர்களுக்கு, வணக்கம். Break up, இப்போது இது சாதாரண வார்த்தையாக உபயோகிக்கப்படுகிறது.

இதற்குக் காரணம் பல இருக்கலாம், ஆனால் எண்பது சதவிதம் இந்த முடிவை எடுப்பதுப்
பெண்கள்தான். கோபமோ ஆச்சரியப்படவோ இதில் எதுவும் இல்லை. பெண்களால்
தோல்வி அடைந்த காதல்கள் அனைத்துக் காலங்களிளும் உண்டு. ஏனென்றால் பெண்களால் எதையும் செய்ய முடியும். இதையும் அவர்களால் மட்டுமே தகுந்தக் காரணத்துடன் செய்ய முடியும்.



          ‘எதற்கெடுத்தாலும் பெண்களை மட்டுமே குறை கூறுங்கள்’ என்று உங்கள் மனதில் தோன்றலாம். முழுமை அடைந்த இடத்தில் தோன்றும் தெளிவில்லாத சிறு இடங்களையேக் குறை என்று கூறுவர். பெண்கள் முழுமை பெற்றவர்கள், எனவே அவர்களைக் குறை கூறுவது இயல்பு தான். ஒரு பெண் தன்னைப் பற்றி மட்டும் நினைத்தால் அவள் நிச்சயமாக காதல் வாழ்வில் சுகமாக இருப்பாள். ஆனால் இயல்பிலேயே பெற்றோரிடமும், உறவுகளிடமும் பேரன்பு கொண்டவளாய்
வளர்க்கப்படுகிறாள். அவள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அனைவரையும் சார்ந்ததாகவே உள்ளது.
பருவ வயதில் வரும் காதல் அனைத்தையும் கடந்து இரு மணங்களை இணைக்கும். ஆனால் திருமணம் என்ற நிலை வருகையில் காதலை கடந்து சில விஷயங்கள் கண்களுக்குப் புலப்படும். அது பெண்களுக்கு மட்டும் மிகவும் தெளிவாகப் புலப்படும். இதுவே பெண்களால் பல காதல்கள் தோல்விக்கு வழி வகுக்கின்றது. நாம் அனைத்திலும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். ‘ப்ராக்டிகல் லைப்’ என்று கூறுவார்கள். அந்த “ப்ராக்டிகல் லைப்” கு (PRACTICAL LIFE) தகுந்தவர்கள் பெண்கள்.




        அடுத்து உங்கள் மனதில் ஒரு கேள்வி உதிக்கும். எத்தனை ஆண்களை வேண்டுமானாலும்
காதலித்துப் பின்பு விட்டுச்செல்வதற்கு பெயர் பிராக்டிகல் லைப் என்று அர்த்தமா?
அதுவல்ல அதன் அர்த்தம். பெண்களால் மட்டுமே எல்லையற்ற அன்பையும், காதலையும் அள்ளி
அளிக்க முடியும். அதே போல அவளால் மட்டுமே தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்காக தன்
உணர்வுகளையும்  புதைத்துக்கொண்டு வாழ முடியும். பிராக்டிகல் லைப் என்பது உணர்வுகளுக்கு இடம் கொடுக்காத வாழ்க்கை அல்ல, உணர்வுகளைக் கடந்த வாழ்க்கை.



        சில பெண்கள் உள்ளனர், டைம் பாஸ் செய்வதற்கென்று கடலை போடுவதை காதல் என்று
கூறுவார். அவர்களைப் பற்றி நான் எழுதுவதற்கு அவர்களுக்குத் தகுதி இல்லை. எனவே இந்த உரை முழுவதும் அவர்களைச் சார்ந்தது அல்ல. ஒரு ஆண் தன்னிடம் எந்த எண்ணத்துடன் பேசுகிறான் என்பது ஒரு பெண்ணுக்குக் கண்டிப்பாக மறைமுகமாகத் தெரிந்துவிடும். தெரிந்ததும் அதை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பது அவளிடத்தில் உள்ளது. இங்கு அவளே முக்கிய இடத்தை வகிக்கிறாள். சில இடங்களில் பெண்களின் மூளை சரியாக வேலை செய்து தெளிவாகச் செயல்படும். பல இடங்களில் பெண்களின் மூளையைக் கடந்து ஹார்மோன்கள் அதிகமாக வேலை செய்து காதலில் விழுந்துவிடுகிறார்கள். வாழ்க்கை என்பது ஏற்றமும் இறக்கமும் உடையது. இதில் சில முடிவுகள் வெற்றியைத் தரும், பல முடிவுகள் அனுபவம் தரும். பெண்களிடம் அதிக சக்தி நிறைந்துள்ளது.
      ஒரு ஆண் ஒரு பெண்ணை விட்டுச்சென்றால் அதன் காரணமும் ஒரு பெண் தான். அது வேறொரு பெண்ணாக இருக்கலாம். உதாரணத்துக்கு தாய். தாயும் ஒரு பெண்தானே. இந்த பூமியில் நிறைந்த சக்தியை குவித்து வைத்திருப்பவள் பெண். உலகத்தையே மாற்றும் உன்னத உயிர் பெண்.ஆக்கவும், காக்கவும். அழிக்கவும் தெரிந்தவள் பெண். பெண்கள் தகுந்த முறையில் இருந்தால் அது ஆக்கத்தை அளிக்கும்.



          நான் கூறியது யாவும் என் சொந்தக் கருத்துக்கள். என்னைப் பொறுத்தவரை பெண்கள் ஆண்களை விட தைரியமும், திறமையும் நிறைந்தவர்கள். இனி யாரேனும், ”இந்த பொண்ணுங்களே இப்படி தான் மச்சான்” அப்படின்னு பேசுனா, டென்ஷன் ஆகாதீங்க. தைரியமா சொல்லுங்க “நாங்க அப்படிதான்னு”




Comments

Popular posts from this blog

வல்லரசுகள் உண்மையாகவே வல்லரசு தானா?

திரு;மதி!

துயரம்