அனுபவம் புதுமை
"மச்சா, Place ஆயிட்டேன்டா!!" இந்த வாசகத்தைக் கூற வேண்டும் என்று பொறியியல் படிக்கும் பெரும்பாலானோர் ஆசை. நாம் நான்காம் ஆண்டு வரும் முன்னரே நம் சீனியர்களைப் பார்த்துப் பழகி இருப்போம். ஆனால் நான்காம் ஆண்டு வந்த பிறகு வாழ்க்கையிலும், மனத்திலும் நிறைய மாற்றம் சிலரிடம் காணலாம். ஏன் இந்த மாற்றங்கள்? என் பார்வையில் சில கருத்துக்கள் இங்கே குறிப்பிட்டுள்ளேன்.
பொதுவாக மாணவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்
1) படித்தது போதும், சம்பாரித்து வாழ்க்கையைத் துவங்கலாம்.
2) படிக்க வேண்டும் எனினும் வேலை ஒன்று இருப்பது பாதுகாப்பு. (Hold back)
3) படிக்கதான் போகிறேன்
இதில் மூன்றாவது வகை மாணவர்கள் தெளிவானவர்கள். அவர்களைப் படிக்க விட்டுவிடலாம்.
முதல் வகை மாணவர்களை காண்போம். வேலை கிடைக்கத் தீவிரமாக உழைப்பர். கிடைத்து விட்டால் சந்தோஷம்தான். இலையெனில் அவர்கள் முகங்கள் புன்னகையை மறந்து அகோரமாக காட்சியளிக்கும்.
அடுத்து இரண்டாவது வகை எடுத்துக்கொள்வோம். இவர்களுக்கு வேலை கிடைத்தால் இன்பம்.இலையெனில் Higher Studies என்ற திரையில் முகங்களை மறைத்து ஆனந்தமாகக் கிளம்பிவிடுவார்கள்.
இந்த முதல் வகை மாணவர்களில் சிலர் மிகுந்த கவலையில் காணப்படுவர். "எனக்கு மட்டும் வேலை கிடைக்கல, என்ன விட மதிப்பெண் கம்மியா இருக்கறவங்களுக்கு வேலை கிடைச்சிருச்சு. என்ன வாழ்க்கடா!!" இப்படி சொல்ற எல்லாரும் கேட்டுகோங்க.
Placements ல ஒரு பெரிய விஷயமா நினைக்காதீர்கள் . Place ஆனவர்கள் அதிமேதாவிகளும் இல்லை, Place ஆகாதவர்கள் முட்டாளும் இல்லை. காரணம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை.நிதானமாக மனசோர்வு அடையாமல் சற்று யோசியுங்கள். எதனால் வாய்ப்பு நழுவியது என்று.உங்கள் தரப்பில் பிழை இருந்தால் பொறுமையாக திருத்துங்கள். உங்களிடம் பிழை இல்லை என்றால் இது உங்களுக்கான இடம் இல்லை என்று உணருங்கள். எந்த வேலை உங்களுக்கு பொருத்தமானது என்று. உங்களை விடக் கடவுளுக்கு நன்றாக தெரியும். அதனால் பொறுமையாக இருங்கள். ஆத்திகன் போல் பேசுகிறேன் என்று தோன்றுகிறதா? சரி, இப்படியும் இதை கூறலாம்.உனக்கு எது பொருத்தமோ அதை நீதான் தேர்ந்தெடுக்கவேண்டும், ஆதலால் பொறுமையாகத் தேடுங்கள். நம் வாழ்கையே ஒரு trial and error தானே.
என் நண்பருடன் நடந்த உரையாடல் ஒன்றை கூறுகிறேன். அவர் மேற்படிப்பு படிக்கவிருப்பம் உள்ளவர். ஒரு அனுபவத்துக்காக Placements ல் பங்கு கொண்டார். அவர் இந்த முதல் வகை மாணவர்களைப் போல மிகவும் பதற்றம் கொண்டு இருந்தார். எனக்கு விசித்திரமாக இருந்தது. " நீ என் இவ்வளவு டென்ஷனா இருக்க, நீதான் படிக்க போறல ?" என்று கேட்டேன். "படிக்கதான் போறேன். ஆனா என் ப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் நல்ல ஜாப் கிடைக்கணும். அவங்கள நினைச்சு தான் நான் டென்ஷன் ஆரென்." என்று கூறினார். எனக்கு சிரிப்பு தான் வந்தது . அவங்க அப்படி இருக்கறதே தப்பு. நாம தான் அவங்கள டென்ஷன் ஆகாம பாத்துக்கணும். நீயே இப்படி இருந்த அப்பறம் எப்படி ?" என்று கூறினேன்.
இதுதான் இன்றைய நிலை. சம்பந்தமே இல்லாத இடங்களில் நம் நிலையை இழக்கிறோம். நம் நிலையை மட்டுமல்லாது மற்றவர்களையும் இழக்கவைக்கிறோம். சற்று அனைத்தையும் மறந்து சிந்தித்து பாருங்கள். உங்களை விட மோசமான நிலையில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். உங்களுக்காக வாய்ப்புகள் ஆயிரம் காத்திருகின்றது. சோர்வடையாமல் நிமிர்ந்து சொல்லுங்கள், எல்லா வாய்ப்புகளையும் நான் உபயோகிப்பவன்.
முதல் வெற்றியை பெருபவனை விட கடைசியில் வெற்றி பெறுபவனே அனுபவம் மிக்கவன்.அவனே வெற்றியை ஈட்டிய பிறகு தோற்கமாட்டான். நீங்கள் அனுபவத்தை நாடுங்கள்.பயப்படாதீர்கள், நம்பிக்கை அற்ற இடங்களிலே தான் பயம் தோன்றும். உங்கள் மீது நம்பிக்கைகொள்ளுங்கள். பொறியியல் படித்த உங்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு தேவையானவற்றை கண்டிப்பாக ஏதேனும் ஒரு வகையில் சம்பாதிக்க முடியும். வருங்காலத்தை எண்ணி வருந்தாதீர்கள், வருத்தமில்லாமல் வரவேற்பு தாருங்கள். வரமாகும் வருங்காலம். இறுதி வரை போராடுங்கள்.
இதெல்லாம் எழுத நன்றாக இருக்கும், என் நிலையில் இருந்தால் தான் உங்களுக்கு புரியும் என்று நினைக்கும் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் வைக்கின்றேன், சற்று உங்கள் நிலையை விட்டு நகருங்கள். இதை நான் எழுதுவதற்கு முக்கிய காரணம் என்னை சுற்றி
இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்கள். ஏதேனும் ஒரு சமயத்தில் அனைவரும் இந்தPlacement என்ற வார்த்தையினால் சிலவற்றை இழந்திருப்போம். எனவே என் ஜூனியர்களுக்கு ஒரு அறிவுரை சொல்ல வேண்டும். எந்த காரணத்தாலும் நிகழ்காலத்தின் இனிய நொடிகளை இழக்காதீர். முகத்தில் என்றும் ஒரு புன்னகை தவழ்ந்து அனைவரையும் உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள். இறுதி ஆண்டை இயல்பாக எடுத்து கொண்டு வாழ்க்கையை இனிமையாக கழியுங்கள்.

Comments
Post a Comment