துயரம்

என் தாய் செவ்வாய் தோஷம் அறியாதவள்,
அறிந்திருந்தால் தன் பிரசவத்தை நாழிகையேனும் தாமதித்திருப்பாள்.
கட்டத்தை திருத்தமாக போட்ட ஜோசியருக்கு-என்
கழுத்தில் திருமாங்கல்யம் போட வரன் கிட்டவில்லை..
முப்பது அகவை அயராமல் கடந்தும்- என்
ஆசைகளை நிறைவேற்ற அன்னையன்றி எவருமில்லை..
என்னவன் வந்தான் முப்பத்தைந்து அகவையில்..
முற்றிய கனிகள் இணைந்தன களவியில்..
கவலைகளற்று களிப்புடன் ஈறாருமாதம் முடிய,
கருப்பை நிரப்பாத வறடியென்று கூறிய,
நாக்களை எண்ணி கலக்கம் அடைந்தேன்..
மாதவிடாய் தாமதமாகும் நேரங்களில் பூரிப்படைந்தேன்..
என்னிடம் என் பிள்ளைக்கு மிகுந்த பிரியம்- அவசரமாக,
கருவுற்ற சிணை முட்டைகளாகவே வெளியே வந்தது.
இளம் கன்று பயமறியாது, ஆனால் உருவமாக,
மாறும் முன்னரே என் சிசு பயமறியாதது.
உலகை பார்க்கும் ஆர்வத்தில் இருமுறை
தோற்றது தைரியமாக வெளியே வந்து..
ஏழு வருடங்கள் ஏழு ஜென்மங்களென ஓடின..
என்னை எண்ணி வருத்தமடைந்து பலபேர் வாடின..

என் தாயின் கல்லீரலும் அதில் ஒன்று..
காலம் கடந்ததால் செயலிழந்து போனது..
கண்ணீருக்கு ஆறுதல் அளிக்கும் தாய் படுக்கையில்,
கணவருடன் காணச் சென்றேன்- அவளை நெருங்கையில்,
நெஞ்சம் துடித்தது, தொண்டை அடைத்தது..
என் கணவருக்கோ இருதயம் அடைத்தது..
கண் இமைக்கும் நொடியில் என்னை பிரிந்தார்,
என் கனவுகளை எல்லாம் கவர்ந்து சென்றார்.
என் குங்குமம் கலையும் முன்னே,
என்னவர் இறப்பிடம் காயும் முன்னே,
அன்னையும் பிரிந்து சென்றாள்,
இரண்டு நாள் பின்னே!!
வழிதேடும் வாழ்க்கையில் நான்.......

Comments

  1. You have a way with words and you capture emotion perfectly. You have a gift dude.. Hoping to see more from you

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வல்லரசுகள் உண்மையாகவே வல்லரசு தானா?

திரு;மதி!