நம்ம பார்வைல தான் இருக்கு

நேத்து ரிலீஸ் ஆன, அநீதி கதைகள் படத்துக்கு போனேன். புளோரிடாக்கு குடி ஏறி மூணு மாசம் தான் ஆகி இருக்கு. அதனால தமிழ் பிரண்ட்ஸ் யாரும் இல்ல. தனியா தான் போனேன். இருபது நிமிஷம் முன்னாடியே நான் தியேட்டர்ல போய் உட்காந்துட்டேன். தமிழ் படம், அதனால தியேட்டர்ல சுமார் ஒரு அம்பது பேரு தான் இருந்திருப்பாங்க. கொஞ்சம் காலேஜ் ஸ்டுடென்ட்ஸ், ரெண்டு மூணு ஃபேமிலி, கொஞ்சம் நடு வயசு ஆம்பளைங்க ன்னு எல்லா வயசு மக்களும் வந்திருந்தாங்க.
சில பேரு தனியா வந்திருக்காளேன்னு வித்தியாசமா என்ன பார்த்தாங்க , சில பேரு  என்ன அப்படி  பார்த்த மாதிரி இருந்துச்சு. படத்தோட சில நுணுக்கமான இடத்துல எனக்கு கை தட்டணும்  போல இருந்துச்சு. ஆனா தயக்கத்தோட கண்ட்ரோல் பண்ணிட்டு இருந்தேன். நம்ம மக்கள் கொஞ்சம் ஜட்ஜ்மெண்டல் ன்னு ஒரு முத்திரை என் ஆழ் மனசுல பதிஞ்சு இருக்கு. என்ன அறியாமலே என்னால எக்ஸ்பிரஸ் பண்ண முடியாத நிலைல நான் இருந்தேன்.ஒரு இன்வாலேன்ட்ரி ஆக்ஷன் மாதிரி. தனியா வந்திருக்கோம், ஒரு பொண்ணு இந்த மாறி விஷயத்துக்குலாம் கை தட்டலாமா? ன்னு பேசுற மக்கள் நடுல அப்படி தான் நான் இருக்கணும் ன்னு மூளை போர்ஸ் பண்ணிட்டு இருந்துச்சு.
படம் வேற லெவல் ல இருந்துச்சு. நான் யோசிச்ச, யோசிச்சிட்டு இருக்கற, யோசிக்க போற எல்லாத்தையுமே பாயிண்ட் அவுட் பண்ணுச்சு. அத பத்தி அப்பறமா பேசலாம்.
கடைசில "எல்லாமே நம்ம பார்வைல தான் இருக்கு" அப்படி ன்னு ஒரு டயலாக் வரும்.
இந்த டயலாக்க கொஞ்சம் ஆழமா யோசிச்சேன். சக மக்கள் ஜட்ஜ் பண்ணுவாங்கன்னு நான் நினைச்சதால தான் நான் எக்ஸ்பிரஸ் பண்ணல. சோ பிரச்சனை என்கிட்டதான் இருக்கு. என்ன எழவ நினச்சா எனக்கென்னன்னு நான் ரியாக்ட் பண்ணிருந்தா, அந்த மாதிரி ரியாக்ட் பண்ணனும்ன்னு நினைச்சவங்க எல்லாரும் ரியாக்ட் பண்ணிருப்பாங்க.
ஜட்ஜ்மெண்டல் கண்கள் இருக்குன்னு வர நினைப்புதான் ஜட்ஜ்மெண்டல் மக்கள உருவாக்குது. நம்ம மொதல்ல ஜட்ஜ்மெண்டலா இருப்பாங்களோ? ன்னு நினைக்கறத நிறுத்தனாலே ஜட்ஜ்மெண்டல் ன்ற ஒரு விஷயம் எக்சிஸ்ட் ஆகாது!
"எல்லாமே நம்ம பார்வைல தான் இருக்கு!"

Comments

Popular posts from this blog

வல்லரசுகள் உண்மையாகவே வல்லரசு தானா?

திரு;மதி!

துயரம்