தீரா உலா - II

  படிக்கட்டுகளில் பரவிக் கிடக்கும் குளிருடன் கதை பேசிக் கொண்டே, ஸாக்ஸ் அணிந்த அவளின் கால்கள், மெல்ல கீழே இறங்கியது. மரப் படிக்கட்டுகளால் சற்று சத்தமாகவே பேசிக் கொண்டிருந்தது. சன்னலின் ஓரத்தில் எட்டிப் பார்க்கும் பனிக் கட்டிகளை, கண்டும் காணதது போல, அந்த கால்கள் கதவை நோக்கி நடந்தது. விரல் நுனியுடன் போட்டியிட்டு, வளர மறுக்கும் நகங்கள் கொண்ட அவளின் கைகள் கதவை திறந்தது.

‘ஹே! வரேன்னு சொல்லவே இல்ல’ ஆயிரம் மின் மினி பூச்சிகளை உள்ளங்கையில் அடைத்தாலும், வெளிவராத ஒரு பிரகாசம் அவள் முகத்தில் தவழ்ந்தது.

அவன் ஏதும் பேசாமல், சிகரட் புகையில் வாடிக் கிடந்த அவன் உதடுகளுக்கு கொஞ்சம் புன் சிரிப்பை பரவ விட்டு உயிர் கொடுத்தான். அவளை கன நொடியில் பின்புறமாக திரும்பச் செய்து, அவன் கைகளை வைத்து, அவள் கண்களை மூடினான். அவள் கண் மை, அவனின் உள்ளங்கை வெப்பத்தில் உருகி, விரல்களில் குறுந்தகவல் எழுத ஆரம்பித்தது.

‘என்ன பண்ற நீ? என்ன இதெல்லாம்?’ அவள் குரல் வளை, உமிழ் நீரை உள் வாங்கி, புன்னகையை அவளின் இதழ்களில் தெளிக்க தொடங்கியது.
நீண்ட நெடிய சோபாவில் அவள் அமர வைத்து, கைகளால் சிறைப் பிடித்த அவள் கண்களை விடுவித்தான்.

‘என்ன ஆச்சு? என்ன இதெல்லாம்? ஆச்சர்யமும், ஆர்வமும் கலந்த தொனியில் அவள் கேட்டாள்.

பதிலேதும் கூறாமல் அவன் எதிரில் அமர்ந்தான். தலையை கிழக்கு மேற்காக அசைத்து, ஒன்றுமில்லை என்ற பாவனை செய்தான்.

‘ஒண்ணுமில்லாததுக்கு தான் இவளோ சீன் உஹ்’ என்று சலித்து 
கொண்டாள். மறுபடியும் தலையை தெற்கு வடக்காக அசைத்து, ஆம் என்பதை சைகையாக உணர்த்தினான்.

‘சரி’ பெருமூச்சிட்டாள்

அந்த சோபாவின் முன், மேஜையிலிருந்த ப்ளு டூத் ஸ்பீக்கரை, அவள் கையில் தோட, அது விட்டு போன தன் காதலை தொடர ஆரம்பித்தது.

‘காதல் என்பது மாய வலை, கண்ணீரும் கூட சொந்தமில்லை,
வலி இல்லாமல் வாழும் வாழ்க்கையே தேவை இல்லை!

அட காதல் என்பது மாய வலை, சிக்காமல் போனவன் யாரும் இல்லை,
சிதையாமல் வாழும் வாழ்க்கையே தேவை இல்லை!’ 

அவள் எழுந்து சமையல் அறையை நோக்கி நடந்தாள். காபி தயார் செய்ய பாலை எதுத்து அடுப்பில் வைத்தாள். மனதில் வெவ்வேறு சிந்தனைகள் அவளுக்கு ஓடிக் கொண்டிருந்தது. இன்பத்தை அள்ளி தந்த முதல் காதல், அதனால் வந்த ஏமாற்றங்கள், அந்த நாடகங்கள் அடங்கி சாந்தம் அமையும் நேரத்தில் புதியதாய் மலரும் ஒரு உறவு.

பால் கொதித்து பொங்கும் தருவாயில், அவள் அடுப்பை அணைத்தாள். மனதையும் தான். இரு கரு நீல பிங்கான் கப்பில், பாலை ஊற்றி, வெளியே எடுத்து வந்தாள்.

அமர்ந்திருந்த ஆண்மகனை காணவில்லை. இடக்கையில் இருந்த கப், கவலை கொள்ள ஆரம்பித்தது, யார் அதை ஏந்தப் போகிறார்கள்? என்று.
‘ஜோ, ஜோ? எங்க இருக்க? அவள் குரல், சுவர்களால் ஒலி பெருக்கப்பட்டு, மாடியிலிருந்த அவன் காதுகளை வந்தடைந்தது.

அவள் கால்கள், தன்னுடன் பேசிக் கொண்டிருந்த படிக்கட்டுகளுக்கு, வேறொரு நண்பன் கிடைத்து விட்டதை எண்ணி, படிகளை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தது. அவன் மெல்ல மெல்ல இறங்கி வந்தான்.

இடக்கை காபி கப் அவன் பார்வையில், வெட்கப்பட்டு நெளிய அவள் கைகளிலிருந்து நழுவ முற்பட்ட வேளையில், அவன் விரைந்து வந்து பிடித்தான். இருவரும் காபி அருந்திய படி, சோபாவில் அமர்ந்தனர். அவன் தொலைபேசி ஒளிக்க, அவன் சன்னல் வழியே வெளியே எட்டி பார்த்தான்.
ஒரு கருநிற கார் அவனை வா வென்று அழைத்த படி நின்றிருந்தது. கையிலிருந்த காபியை விடு விடு வென்று குடித்து விட்டு, அவளிடம் கண்களால் விடை பெற்று, பரபரப்பாக சென்று விட்டான்.

நொடிகளில் நடந்த எதற்கும் அர்த்தம் புரியாமல் அவள் திகைத்து நின்றாள். அவன் குடித்த கப்பை கழுவி வைத்துவிட்டு,’என் இனிய பொன் நிலாவே!’ பாடிக் கொண்டிருந்த ஸ்பீக்கரை எடுத்துக் கொண்டு, படிகளை நோக்கி நடந்தாள்

‘ஏன் வந்தான்? எதுக்கு வந்தான்? என்ன பண்ணான்? ஒன்னும் புரியல’  முனங்கியபடி மேலே சென்றாள்

அவள் கால்கள், படிகட்டுகளிடம் ஊடல் சண்டை போட ஆரம்பித்தது. அவள் அறையின் உள் சென்று. கத்திரி பூ வண்ண போர்வையை விரித்த மெத்தை மேல் அமர்ந்தாள். எதிரில் மாட்டி இருந்த முகக் கண்ணாடியில் ஏதோ புதிதாக தெரிந்தது. அவள் அருகில் சென்று பார்த்தாள். அவள் முகம் தங்கம் போல ஜொலிக்க ஆரம்பித்தது.

 ‘தங்கமே!’ என்று எழுதி இருந்தது.அவன் எழுதி சென்றிருந்தான். அவள் தொலைபேசியை தேடி குறுந்தகவல் வரைய ஆரம்பித்தாள். பின்பு ஹார்ட்ஸ் உம், ஸ்மைளிஸூம் பறக்க ஆரம்பித்தன.

காதல் முட்டாள்தனமானது, அதற்க்கு அர்த்தம் மடத்தனம் அல்ல, முட்டாள் தனம் என்றும் நாம் நினைத்த 
சின்ன சின்ன விஷயங்கள் கூட பொக்கிஷமாக உணர்த்தும் காதல்.

காரணமே இல்லாமல் கண்ணை முடுவதும், கண்ணாடியில் கிறுக்குவதும், நண்பர்கள் செய்திருந்தால், ஜூம் லென்ஸ் வைத்து பார்த்து, அழகை ரசிக்க மாட்டோம்.
காதலில் இதே விஷயம் நடந்தால், அமேசான் ஆட் ஆன் (Amazon Add On) மாதிரி உடன் கொஞ்சம் பீலிங்சும் வருகிறது.
காதல் யாரிடம் பூத்தாலும், எத்தனை பேரிடம் பூத்தாலும், அதன் ஒவ்வொரு மலர்ச்சியின் மனம் தனித்துவமானது.
இன்பமும் துன்பமும் சமமாக தருவது தான் காதல். அளவில்லா இன்பத்தில் திளைப்போருக்கு, கவலையை தாங்கும் சக்தி கொடுக்கும், கவலையில் வாடிய மனதிருக்கு, இன்பம் உணர பக்குவத்தை கொடுக்கும்.

காதலின் இசை மாறிக் கொண்டே இருக்கும், 
ஜெசுதாசில் இருந்து, சித் ஸ்ரீராம் ஆகா மாறலாம்!
ஆனால், ஒரே பீலிங், ஒன்றே இசை!!




உலா தொடரும்.....

Comments

Popular posts from this blog

வல்லரசுகள் உண்மையாகவே வல்லரசு தானா?

திரு;மதி!

துயரம்