கொல்கத்தா
மாசற்ற மார்கழியின் துவக்கத்தில்,
கிழக்கு நோக்கி பயணம்...
மெதுவாக மண்மனம் மாற,
வங்காள வாசம் வீசியது..
காற்றில் மிதக்கின்ற பாலமாய்,
கரைகளை இணைத்த கரங்களாய்,
பிரம்மாண்டமாய் நின்றது ஹாவுரா..
வங்காள வாசம் வீசியது..
காற்றில் மிதக்கின்ற பாலமாய்,
கரைகளை இணைத்த கரங்களாய்,
பிரம்மாண்டமாய் நின்றது ஹாவுரா..
காசியில் விளையாடிய மகளுக்கு,
கொல்கத்தாவில் பூபுனித விழா,
திருமணத்துக்கு தயாராகும் கங்கா..
கொல்கத்தாவில் பூபுனித விழா,
திருமணத்துக்கு தயாராகும் கங்கா..
விவேகானந்தரை உருவாக்கிய குரு,
உன்னத கருத்துகளை பகிர்ந்த,
இராமகிருஷ்ணரின் நினைவுச் சின்னம்..
உன்னத கருத்துகளை பகிர்ந்த,
இராமகிருஷ்ணரின் நினைவுச் சின்னம்..
ருத்ரதாண்டவத்தால் துண்டானாள் சக்தி,
பாதங்கள் விழுந்தன வங்காளத்தில்,
நாவினால் ஈர்க்கும் காளி..
பாதங்கள் விழுந்தன வங்காளத்தில்,
நாவினால் ஈர்க்கும் காளி..
மலைகளுடன் ஊடல் கொள்ள,
ஞாயிரும் மறையும் அவசரமாக,
காண கூடுவோர்கென்று பூங்கா..
ஞாயிரும் மறையும் அவசரமாக,
காண கூடுவோர்கென்று பூங்கா..
கார்குழல்கள் அருவியாய் பாயும்,
கருநிறம் கண்களில் மட்டும்,
பால் நிறமான மங்கைகள்..
கருநிறம் கண்களில் மட்டும்,
பால் நிறமான மங்கைகள்..
வானளாவிய நேர் கோபுரங்களாக,
திறமைகளுக்கு வானமே எல்லையென,
உணர்த்தும் உயர்ந்த கட்டிடங்கள்..
திறமைகளுக்கு வானமே எல்லையென,
உணர்த்தும் உயர்ந்த கட்டிடங்கள்..
மாற்றான் ஆண்டான் தாய்மண்னை,
வளங்களை தந்தோம் தியாகியாக,
கடத்திச்செல்ல துறைமுகமானது கல்கத்தா..
வளங்களை தந்தோம் தியாகியாக,
கடத்திச்செல்ல துறைமுகமானது கல்கத்தா..
வெள்ளையர்களின் சுவடுகளாகத் திகழும்,
இரு தசாப்தமாக நிருவப்பட்ட,
விக்டோரியாவுக்கு சமர்பணமான மாளிகை..
இரு தசாப்தமாக நிருவப்பட்ட,
விக்டோரியாவுக்கு சமர்பணமான மாளிகை..
அணுஅணுவாய் ரசித்தான் ஆங்கிலேயன்,
ஆதலால் அனுபவித்தான் மண்னை
நிருபிக்கும் சாட்சியாகச் சித்திரங்கள்..
ஆதலால் அனுபவித்தான் மண்னை
நிருபிக்கும் சாட்சியாகச் சித்திரங்கள்..
நிழற்படக்கருவியில் நிறைவேறாத ஆசை,
மங்காத பாரதத்தின் அழகை,
நிகழ்த்தியது அயல் நாட்டானின் ஓவியம்..
மங்காத பாரதத்தின் அழகை,
நிகழ்த்தியது அயல் நாட்டானின் ஓவியம்..
சித்திரத்தின் சித்தாந்தம் அறிய,
வண்ண வேறுபாடுகளை இரசிக்க,
நாள் நூறு வரமாக வேண்டும்..
வண்ண வேறுபாடுகளை இரசிக்க,
நாள் நூறு வரமாக வேண்டும்..
உயிரியல் அதிசயங்களின் விரிவுரை,
இயற்பியல் பண்புகளின் விளம்பரம்,
இயந்திரவியலால் இயங்கும் அறிவியல் கூடம்..
இயற்பியல் பண்புகளின் விளம்பரம்,
இயந்திரவியலால் இயங்கும் அறிவியல் கூடம்..
மனிதர்களுக்கு நிறங்கள் பல,
உணர்ச்சிகரமான முகங்கள் பல,
காண்பிக்கும் ஒளியியல் மாயை..
உணர்ச்சிகரமான முகங்கள் பல,
காண்பிக்கும் ஒளியியல் மாயை..
ஒளிமங்கிய அந்திமாலை குளிரில்,
இரு பாலங்களின் அலங்காரங்கள்,
ஹூக்லியில் நீந்துவதுப்போல கடல்உலா..
இரு பாலங்களின் அலங்காரங்கள்,
ஹூக்லியில் நீந்துவதுப்போல கடல்உலா..
பெல்ஜியம் கண்ணாடிகள் பலபலக்கும்,
வெண்ணிற பெண்சிற்பங்கள் மயங்கச்செய்யும்,
பராமரிப்பற்ற சலவைக்கல் மாளிகை..
வெண்ணிற பெண்சிற்பங்கள் மயங்கச்செய்யும்,
பராமரிப்பற்ற சலவைக்கல் மாளிகை..
நோபல் பரிசுக்குப் பெருமைச்சேர்த்த,
ஐன்ஸ்டீனுடன் உரையாடிய இந்தியன்,
அதிமேதையான தாகூரின் இல்லம்..
ஐன்ஸ்டீனுடன் உரையாடிய இந்தியன்,
அதிமேதையான தாகூரின் இல்லம்..
தொழில்நுட்ப வளர்ச்சி பெருகினாலும்,
தன்னிலையில் மாற்றம் வந்தாலும்,
மாற்றங்களை விரும்பாத பழங்குடியினர்..
தன்னிலையில் மாற்றம் வந்தாலும்,
மாற்றங்களை விரும்பாத பழங்குடியினர்..
பெண்ணியம் பேசும் பெண்களின்றி,
மேற்கத்திய முன்னேற்றத்துக்கு தடையின்றி,
இருபாலரும் இணைந்தருந்தும் திரவம்..
மேற்கத்திய முன்னேற்றத்துக்கு தடையின்றி,
இருபாலரும் இணைந்தருந்தும் திரவம்..
திங்களை சிறு உருண்டைகளாகச்செய்து,
கடல்நீரில் உப்பின்றி சர்க்கரைச்சேர்த்து,
புவிஈர்ப்பு விசையின்றி இணைந்த ரசகுல்லா..
கடல்நீரில் உப்பின்றி சர்க்கரைச்சேர்த்து,
புவிஈர்ப்பு விசையின்றி இணைந்த ரசகுல்லா..
அதிகாலை சூரியனை உருக்கி,
குழந்தைகளின் கிறுக்கல் போல,
ஆழியிலிருந்து மீட்கப்பட்ட ஜிலேபி..
குழந்தைகளின் கிறுக்கல் போல,
ஆழியிலிருந்து மீட்கப்பட்ட ஜிலேபி..
நீர்குமிழிகளுக்கு காக்கி சாயமிட்டு,
மேல்பாகத்தை நீக்கி ஓடமாக்கி,
கிழங்குடன் மிதக்கும் பானிபூரி..
மேல்பாகத்தை நீக்கி ஓடமாக்கி,
கிழங்குடன் மிதக்கும் பானிபூரி..
பிரம்மனிடம் வடிவமைத்தல் கற்று,
உயிர்பித்தல் அறியாமல் உருவமளித்து,
உயிருள்ளவர்களுக்கு பெருமிதமளிக்கும் மெழுகு அருங்காட்சியகம்..
உயிர்பித்தல் அறியாமல் உருவமளித்து,
உயிருள்ளவர்களுக்கு பெருமிதமளிக்கும் மெழுகு அருங்காட்சியகம்..
தெவிட்டாத அதிசயங்களை கண்டுகளித்து,
இருவார காலம் நிறைவடைந்து புறப்படுகிறேன்,
கொல்கத்தாவின் மகத்துவத்தால் நெஞ்சம் நிறைந்து..



Comments
Post a Comment