நிழலாடும் பிம்பங்கள்

         இளம் சிவப்பு நிற கதிர்கள் நீல வானில் விளையாடும் மேகங்களை மெருகேற்றி, மெய் தரும் கசப்பை காட்டிலும், பொய் தரும் இன்பத்தால் என் கண்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருந்தது. பேருந்து வேகமாக முன்னே செல்ல என் எண்ணங்களோ பின் நோக்கி சென்றது.
கல்லூரியில் முதல் நட்பு இறுதி வரை அதே போல் தொடர்ந்தால் அவர் பாக்கியசாலி யாக இருக்க வேண்டும். முதல் நட்பு முடிவு பெற்றிருந்தால் அவர் அனுபவசாலியாக இருக்க வேண்டும். சில நேரங்களில், சில மனிதர்களை நாம் மறக்க நினைக்காமல் மறக்கிறோம். மறந்துவிட்டோம் என்பதை நினைவூட்ட சில நொடிகள் தேவை.
   முதல் வருடம் என்னுடைய நட்பு பாராட்டியவர்களில் சிலர் அதே போல் இன்று பேசுவதில்லை. மூன்று வருடம் வரை அயல் நாட்டினர் போல இருந்தவர்கள் இன்று எதிர்பார்க்காமல் என்னிடம் சிநேகம் பாராட்டுகிறார்கள். நம் எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும், செயல்களுக்கும் ஏற்றார் போல நம் நட்பு வட்டம் மாறிக்கொண்டே இருக்கும். இது அனைவருக்கும் இயல்பானதே. மாற்றம் நிகழ்த்தும் மாற்றத்தையே நாம் கவனிக்க வேண்டும்.

என்ன மாற்றம்? எதற்க்காக மாற்றம்?

  இயற்கையை தவிர வேறேதும் தேவை இல்லை நம் மனதை தெளிவாக்க. என் கண்களுக்கு விருந்தளித்த சூரிய அஸ்தமனம், இதற்கும் பதிலளித்தது. அந்த வானத்தில் தோன்றிய மேகங்களும், அதன் வடிவமும், பிம்பமும் எழிலை அள்ளி விசியது. இதே வானம் நாளை வேறு மேகங்களையும், வடிவங்களையும், பிம்பங்களையும் கொண்டு நம் கண்களுக்கு விருந்தளிக்க போகிறது. கண்களுக்கு விருந்து நிச்சயம், அனால் அதன் சுவை காலத்துக்கு தகுந்தது போல மாறுபடும். வடிவமோ, பிம்பமோ மாறிவிட்டது என்று அதை நோக்காமல் இருந்தால் கண்களுக்கு விருந்தில்லை.
  இதுதான் என் வாழ்க்கையின் நிலையும், எனக்கு நண்பர்கள் எண்ணிக்கை அதிகம். நேற்று என்னுடன் இருந்தவர்கள் அளித்த ஆனந்தமும், துக்கமும் ஒரு துளி அளவும் குறையாமல் இன்றும் என்னுடன் இருப்பவர்கள் தருகிறார்கள். நாளை இருப்பவர்களும் தருவார்கள். அன்பு, நேசம், காதல், நட்பு, இவை அனைத்துமே நம்முடன் என்றுமே உறவாடுபவை. அதை நாம் உணர வேண்டும். மாற்றங்களை நினைத்து வருந்தாமல், அதை ஆனந்தமாக ஏற்றுக்கொள்ளுங்கள். நிகழ் காலத்தை இழப்பவன், எதிர் காலத்துக்கு சொந்தம் கொண்டாட முடியாது.
வடிவங்கள் அந்த நிலையில் அன்று இருந்தால் தான் அழகு, அதே போல, அந்த நேரத்தில் அந்த நட்பை அல்லது அந்த நண்பனை இன்று புதிதாய் தோன்றிய நட்பு தந்திருக்க இயலாது. எனவே வாழ்வின் ஒவ்வொவொரு நட்பும் நாம் செய்த பாக்கியத்தால் உருவானது. அனைத்தையும் பாராட்டுங்கள்.
  இன்று இந்த வழியில் செல்வதால் நான் இவ்வானத்தை கண்டேன். நாளை இதே இடத்தில என்னால் இந்த வானை காண இயலாது. வேறொரு இடத்திலிருந்து இதை காண்பேன். வானத்தை காணவே முடியாமல் கூட நான் ஆகலாம்.
  ஏதேனும் ஒரு வகையில் உங்கள் முன்னாள் நண்பனை பார்க்கும் வாய்ப்பு அமைய பெற்றால் அதை தவிர்க்காதிர்கள். உங்களுள் பகைமை வலுவாக இருந்தாலும், அவன் உங்கள் நண்பன். பேச வேண்டும் என்று அவசியம் இல்லை. அனால் எதிரி போல் அவனை காண வேண்டாம். அந்த அளவுக்கு பக்குவம் உங்கள் மனதுக்கு வர வில்லை என்றால், இப்படி எடுத்துக்கொள்ளுங்கள். அவர் முன் நீங்கள் ஆனந்தமாக இருகின்றீர்கள் என்பதை காண்பியுங்கள். மனிதன் மனது ஒரு குரங்கு போன்றது. கண்டிப்பாக பதிலுக்கு அவர் ஆனந்தாமாக இருப்பதாக காண்பிப்பார். முடிவு இருவருக்கும் ஆனந்தம்.
  
  மாற்றத்தின் மாற்றம் இனியதாய் இருக்க வேண்டும். இன்று இருவரும் முன் போல் பேசவில்லை என்றாலும் , என்றோ ஒரு நாள் இருந்த உங்கள் நட்புக்கு மரியாதை தாருங்கள். ஒரு சிறு புன்னகையில் நாம் கடுகளுவும் குறைய மாட்டோம். முடிந்த நட்பானாலும், முடியாத நட்பானாலும் நமக்கு எதாவது சிறு செயலில் உதவி இருப்பார்கள், அதை எண்ணி உங்கள் புன்னகைக்கு மரியாதை அளியுங்கள். அனைவரையும் புன்னகையில் வாழ்த்திடுங்கள், ஏனினில் அவன் முந்தைய நண்பனாக இருக்க வேண்டும் அல்லது வருங்கால நண்பனாக இருக்க வேண்டும். இறுதி நாட்களில் நிஜங்களை மகிழ்வித்து, நெஞ்சத்தில் என்றும் வீற்றிருக்கும் நினைவுகளாக செதுக்குங்கள்.

  கல்லூரி பேருந்து பயணம், என் இன்பங்களும் துன்பங்களும் இணைந்த எண்ணங்களால் நிறைந்தவை. இன்னும் இரண்டு நாளே மிஞ்சி இருக்கும் இந்த பயணம், வேறென்ன விடைகளை தரவிருக்கும் என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன். பயணங்கள் என்றுமே முடிவதில்லை. பாதைகள் வேறானாலும், வழி துணைகள் மாறினாலும், நீங்கள் கடக்கும் வழி எங்கும் உங்கள் கால் தடங்களை நல்ல முறையில் பதித்துச் செல்லுங்கள். வருங்காலத்துக்கு வழி காட்டுங்கள். அனைவரிடமும் அன்பு பாராட்டுவோம். 

Comments

  1. Really nice...made me think of my past ;)

    ReplyDelete
  2. பயணங்கள் முக்காலத்தையும் உள்ளடக்கியதே!நேற்று இல்லாமல் இன்று இல்லை , இன்று இல்லாமல் நாளை இல்லை !கருத்தொற்றுமை !!

    ReplyDelete
  3. பயணங்கள் முக்காலத்தையும் உள்ளடக்கியதே!நேற்று இல்லாமல் இன்று இல்லை , இன்று இல்லாமல் நாளை இல்லை !கருத்தொற்றுமை !!

    ReplyDelete
  4. We not only share our names we have our line of thoughts as same akka.... Very true and pucca reflection of maturity 😘✌👍

    ReplyDelete
    Replies
    1. Happy to see your comment ma!!!! Thank you😊

      Delete

Post a Comment

Popular posts from this blog

வல்லரசுகள் உண்மையாகவே வல்லரசு தானா?

திரு;மதி!

துயரம்