உறவுகளின் – அழைப்பும், அணைப்பும்
உறவுகளின் உணர்வுகளை உணர்வதும்,
புரிதலும் இன்று வரை எவராலும் எளிதாக செய்ய கூடிய செயலாக இருந்ததில்லை.
சிலந்தியின் வலையில் சிக்கி தவிக்கும் சின்னஞ்சிறு பூச்சிகளை போல நாம் உணர்ச்சிகளின்
வலையில் ஒவ்வொரு நாளும் தவித்துக்
கொண்டிருக்கிறோம். இன்று வளர்ச்சிப் பெற்ற தொலைத்தொடர்ப்பு தொழில்நுட்பத்தால் ஒரு
வகையில் நாம் அனைவரும் இணைந்தாலும், சில வருடங்கள் முன்பு நாம் உணர்ந்த தனிமையை அவ்வப்போது உணர்ந்துக்
கொண்டேதான் இருக்கிறோம்.
காதலுக்கும் நட்புக்கும் நம் அனைவர்
மனதிலும் தனி இடம் கொடுத்திருக்கிறோம். சில வருடங்கள் முன்னர் பெரும் பாலானோர்
மனதில் ஒரு கருத்து நிலவி இருந்தது. பல வருடங்களாக தொடர்ப்புகளும் உரையாடல்களும்
மறைந்திருந்தாலும் நட்பும் காதலும் அதே போல் நிலைத்து நிற்கும் என்று. இது அன்று
இருந்த சூழ்நிலையில் முற்றிலும் உண்மை. அன்று இருந்த நாம் அன்புடையவர்களிடம்
பகிர்ந்துக் கொள்ள முடியாமல் தவித்தாலும் அந்த தவிப்பு மறுபுறமும் இருக்கும் என்ற
நம்பிக்கையில் மன நிறைவு பெற்று முன்னேரிக் கொண்டிருந்தோம். பிரிவுகளின் சலனங்களில்
சிக்கினாலும் மறுபுற நபருக்கு நம் எண்ணங்களால் உறுவாக்கிய முகமூடியை பொருத்தி
திருப்தி பெற்றிருந்தோம்.
ஆள் காட்டி விரலின் நுனியில்,
உலகை நொடியில் சுழற்றிக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் நாம் எதற்கும் முகமூடி
இட்டு மூட விருப்பமில்லாதவர்களாக தான் இருக்கிறோம். இது ஒரு வகையில் சரியான
பாதைதான். நினைத்த நேரத்தில் நினைத்தவர்களிடம் உரையாடி அனைத்தையும் கொட்டி
விடுகிறோம். ஒருவர் நம் குறுந்தகவலுக்கும், அழைப்புகளுக்கும் சரியான மறு மொழி
அளிக்காவிடில் கசப்பான எண்ணங்களை நம் மனதுக்குள் புகுத்தி விடுகிறோம். அது ஆருயிர்
உறவுகளானால் ஏமாற்றம் நிலவுகிறது.
‘Long distance relationships doesn’t works out’ என்
நண்பர்களுள் சிலர் இந்த சொற்றொடரை பல முறை கூறியள்ளனர். நான் அன்று அதை பெரிதாக
எண்ணியதில்லை. இன்று ஒரு வகையில் இது உண்மைதானோ என்ற எண்ணம் என்னிடம் வந்துள்ளது.
பிரிவு உண்மையான உறவுகளுக்கு
உரமாகும். அளவுக்கு மீறிய உரம் உறவுகளை அழித்து விடும். உங்களுக்கு
முக்கியமானவர்கள் என்று தோன்றுபவர் எவராயினும் தொடர்ப்பில் இருங்கள். இயந்திர
வாழ்க்கையில் தான் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். நின்று உறவுகளிடம் இளைபார
வேண்டாம். ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு குரல் உங்களை அழைத்தால் பதிலுக்கு வார்த்தைகளில்
அவர்களை அனைத்துக் கொள்ளுங்கள். அதற்கும் நேரமிலாமல் ஓடுகிறேன் என்று கூறுபவர்களை
விட்டுவிடுங்கள், விட்டுச் சென்ற இடத்தில் மறுபடியும் சந்திபீர் அன்று நீங்கள்
அணையுங்கள்.
உணர்ச்சிகளுக்கு இடம்
கொடுக்காத வாழ்க்கை வாழ்வது வீண் என்று உணர்த்தி!!

Super
ReplyDelete