விதைகளின் விழுதுகள் - 1

"நறுமுகைகளின் முகிழ்நகைகளை புகைப்படத்தில் நிலைநிறுத்தும் நாம், அதன் முகிழ்நகைகளை நிஜத்தில் நிலைத்திருக்க, நாம் ஆற்ற வேண்டிய செயல்களை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறோம்"
 நான் பேச வருவது நம் மழலை களஞ்சியங்கள் பற்றி தான். நானும், நீங்களும், அனைவரும் அந்த பருவங்களை கடந்து வந்திருப்போம். நம்மில் பலர் நன் முறையில் வளர்க்கப்பட்டு, இன்று இந்த உரையை படிக்கும் அளவு அறிவுடையவர்களாக இருக்கிறோம். 

      குழந்தை வளர்ப்பு என்பது தனி கலை என்று பலர் கூறுவர். முற்றிலும் உண்மை. இன்றைய நிலையில் கலை எனக் கருதக் கூட வேண்டாம். தொல்லை எனக் கருதாமல் இருந்தால் போதும். ரேக்ளா பந்தயத்தில் ஓடும் ஆ க்களை போல பெற்றோர்களே ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், குழந்தைகள் எங்கே ஓடுவார்கள்? குழந்தைகளை ஓட விட்டு ஒரு நாள் வேடிக்கை பாருங்களேன்..

    மாறி வரும் வாழ்க்கை முறையில் பெற்றோர்கள் இருவருமே வேலையில் உள்ள மன அழுத்தத்தை தாண்டி வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். இது இல்லத்தரசிகளுக்கும் பொருந்தும். அவர்களும் ஒரு வகையில் வீட்டு வேலைகளை செய்கிறார்கள் அல்லவா. மன அழுத்தம் அவர்களுக்கு ஏது என்று கேட்கலாம். இங்கு தான் ஒரு புது வித விடை காத்துக்கொண்டிருக்கிறது. இல்லத்தரசிகளுக்கு மற்றவர்களை போல வெளியே சென்று வேலை பார்க்க முடியவில்லையே என்று மன வருத்தம். பணியில் உள்ள மகளிருக்கு இல்லத்தரசிகளாக இருக்க வேண்டும் என்று மன வருத்தம். முடிவில் எவருமே அவர் நிலையின் அருமையை அறிவதில்லை. இது பெரும்பாலும் பல வீடுகளில் நடந்து வரும் ஒரு விஷயம் தான்.
       
        நாம் நம் நிலையை அறிய இயலவில்லை என்றால் எப்போது ஒரு குழந்தையின் நிலையை அறிவோம். ஒவ்வொரு குழந்தையும் ஒரு மகரந்தம். அந்த மகரந்தம் (pollen) சரியான இடத்தில், சரியான முறையில் பொருத்தப்படாவிட்டால் ஒரு சாதாரண தூசியாக மாறிவிடும். அதிக்கப்படியான தூசி ஒவ்வாமை (allergy) உருவாக்கி தீங்கு விளைவிக்கும். இது தான் இன்று நடந்துக் கொண்டிருக்கிறது. நன் முறையில் உருவாக்கப் படாத ஒவ்வொரு குழந்தையும் ஆயிரம் தீங்கு விளைவிக்கும்.

     நல்லதோ கெட்டதோ ஏதோ ஒரு காரணத்துக்காக நம் பெற்றோர்கள் அவர்களின் பெற்றோர்கள் சொன்னதை, அவர்கள் பெற்றோர்கள் ஆன பிறகும் கேட்டார்கள். ஆனால் நமக்கு கட்டுப்பாடுகள் சற்று தளர்ந்தே இருந்தது. இதன் விளைவு நம் முடிவுகளை நாமே எடுக்கலாம். அனால் அனைத்து இடத்திலும் இது நன்மை பயக்குமா? இல்லை, பல இடங்களில் தோல்வி தான்.

அப்பா, நான் இந்த drawing இன்னிக்கு பண்ணேன்’ என்று கூறி வரும் எத்தனை குழந்தைகள், ஏமாற்றத்துடன் எழுதுகோல் கீழே வீசிருக்கும்.

எத்தன முறை சொன்னாலும் கேட்க மாட்டியா, வீட்ட விட்டு வெளில போன கால வெட்டிருவேன்’ என்று மிரட்டும் அம்மாக்களின் முகங்கள், கனவுகளில் கூட துரத்துவதை எத்தனை குழந்தைகள் வெளியே சொல்லியிருக்கும்.

    இன்று வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்கள் போல இந்த உரையும் குழந்தைகளை அவர்கள் போக்கில் விடுங்கள் என்று கூற நான் எழுத வில்லை. ஆனால் என் வாழ்க்கையில்ழ குழந்தையை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதை விட எவ்வாறு வளர்க்க கூடாது என்பதையே நான் பெரும்பாலும் உணர்ந்துள்ளேன். என் வாழ்வில் பல நாட்கள் இந்த சிந்தனைகளே இருந்திருக்கிறது. சில நாட்களாக குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்று கற்றுக் கொண்டுவருகிறேன். 

    குழந்தைகளின் உடலியல், நடத்தை , பழக்க வழக்கங்கள் அனைத்துமே இரண்டு முக்கிய விஷயங்களால் சித்தரிக்க படுகின்றது. ஒன்று மரபணு தொகுப்பு, மற்றொன்று அவர்கள் வளரும் சுற்று சூழ்நிலை. இவ்விரண்டும் ஒரு குழந்தையின் வாழ்க்கையை பெரும்பாலும் பாதிக்கும்.
இச்சிறிய மழலைகளை வளர்க்கும் பொறுப்பு பெற்றிருக்கும் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொறுமையும் அன்பும் பாசமும் பகுத்தறிவும் இருந்தாலே போதும் நல்ல வழியில் குழந்தைகளை நடத்த. ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் போது வலியில் நாம் காணும் இன்பத்தை, அவர்கள் கொடுக்கும் தொல்லையிலும் காண வேண்டும். அவர்கள் தோல்வி அடையும் தருணத்தில் ஊக்குவிக்க வேண்டும். அவர்களை திருத்த வேண்டாம் என்று கூற வில்லை. அவர்கள் போக்கில் திருத்துங்கள் என்கிறேன். இவ்வாறு பொறுமையாக பக்குவமாக குழந்தையை ரசிக்கும், பாராட்டும் அளவு உங்களுக்கு வாழ்க்கை அமையவில்லை என்றால், தயவு செய்து குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டாம்.


சரி...
எவ்வாறு குழந்தைகளின் சூழ்நிலை அவர்கள் வாழ்வை பாதிக்கும்? அவர்கள் மரபணு இதில் என்ன பங்கு வகுக்கிறது?


.... சில நாட்களில் காணலாம்

Comments

  1. Wowww.Hope your child will have a great future..?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வல்லரசுகள் உண்மையாகவே வல்லரசு தானா?

திரு;மதி!

துயரம்